ஆட்டோமொபைல்
டாடா மோட்டார்ஸ்

கால் நூற்றாண்டு கொண்டாடிய காருக்கு டாட்டா சொல்லும் டாடா மோட்டார்ஸ்

Published On 2019-09-17 09:36 GMT   |   Update On 2019-09-17 09:36 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலாக இருந்த சுமோ உற்பத்தியை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சுமோ காரின் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து டாடா சுமோ நாடு முழுக்க எந்த விற்பனையகத்திலும் கிடைக்காது.

டாடா சுமோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. 25 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த டாடா சுமோ தற்சமயம் ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து விடைபெற்றுக் கொண்டது. இந்தியாவில் அமலாகியிருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு சுமோ பொருந்தாததால், உற்பத்தி நிறுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் சுமோ மாடலை அப்டேட் செய்யும் திட்டம் இல்லாததால், டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இந்தியாவில் ஏ.ஐ.எஸ். 145 பாதுகாப்பு விதிகள் மற்றும் புதிய வாகன பாதுகாப்பு திட்டம் போன்றவற்றை சுமோ பூர்த்தி செய்யவில்லை. இந்திய சந்தையில் டாடா சுமோ அதிக பிரபலமான எஸ்.யு.வி.யாக இருந்தது.



சுமோ மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்.பி.வி./எஸ்.யு.வி. பிரிவு விற்பனையை அதிகரிக்க உதவியது. டாடா சுமோ சீரிசில் கடைசியாக சுமோ கோல்டு மாடல் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் டாடா சுமோ கோல்டு விலை ரூ. 7.39 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 8.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

டாடா சுமோ கோல்டு மாடலில் பி.எஸ். 4 3.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News