தொழில்நுட்பம்
நெட்ப்ளிக்ஸ் கேம்ஸ்

ஆண்ட்ராய்டில் வெளியானது நெட்ப்ளிக்ஸ் கேம்ஸ்

Published On 2021-11-03 08:17 GMT   |   Update On 2021-11-03 08:17 GMT
முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் கேமிங் சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங் சந்தையில் களமிறங்கியது. ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ஐந்து மொபைல் கேம்களை நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வெளியிட்டு உள்ளது. 

ஐந்து கேம்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியும். கேம்கள் அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் செயலியின் கேம்ஸ் -- டெடிகேடெட் கேம்ஸ் பிரிவில் தோன்றும். இங்கிருந்து கேம்களை நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

கேம்களை விளையாட நெட்ப்ளிக்ஸ் சந்தா மட்டுமே போதுமானது. இதில் விளம்பரங்களோ, கூடுதல் கட்டணமோ, இன் ஆப் பர்சேஸ் என எதுவும் இருக்காது. 



நெட்ப்ளிக்ஸ் மொபைல் கேம் பட்டியல்

- ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 1984
- ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 3 - தி கேம்
- ஷூட்டிங் ஹாப்ஸ்
- கார்ட் பிளாஸ்ட்
- டீட்டர் அப்

அனைவருக்கும் ஏற்றவாரு எதையாவது வழங்கும் நோக்கில் அதிக கேம்களை வெளியிட விரும்புவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கேம்கள் அனைத்தும் பெரியவர்களுக்கானவை. இதனால் கேம்கள் குழந்தைகளுக்கான ப்ரோபைல்களில் இயங்காது. வரும் மாதங்களில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு அதிக கேம்களை வழங்க இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News