செய்திகள்
கலெக்டர் சாந்தா

பழுதடைந்த கட்டிடங்களில் மக்கள் தங்க வேண்டாம்- கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

Published On 2020-11-24 11:23 GMT   |   Update On 2020-11-24 11:23 GMT
மிக கனமழை பெய்ய உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் தங்க வேண்டாம் என கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.

மிக கனமழை பெய்ய உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் தங்க வேண்டாம். அத்தகைய கட்டிடங்களில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News