தொழில்நுட்பம்
சாம்சங் கேம்டிரைவர்

கேலக்ஸி மாடல்களுக்கு கேம்டிரைவர் ஆப் அறிமுகம் செய்த சாம்சங்

Published On 2020-12-13 03:45 GMT   |   Update On 2020-12-12 11:47 GMT
சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த புது செயலியை வெளியிட்டு உள்ளது.

சாம்சங் நிறுவனம் கேம்டிரைவர் எனும் புது செயலியை வெளியிட்டு இருக்கிறது. இது தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேம்டெவ் திட்டத்தின் கீழ் இந்த செயலி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த அறிவித்து இருக்கும் செயலி, மொபைலில் கேமிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும்.



தற்சமயம் கேலக்ஸி எஸ்20 அல்லது நோட் 20 சாதனங்களை பயன்படுத்துவோர் கூகுள் பிளே அல்லது சாம்சங் கேலக்ஸி ஸ்டோரில் இருந்து கேம்டிரைவர் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலி கூகுள், ஏஆர்எம் மற்று்ம குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் கால் ஆப் டியூட்டி மொபைல் மற்றும் போர்ட்நைட் போன்ற கேம்களை புதிய கேம்டிரைவர் செயலி சப்போர்ட் செய்கிறது. இந்த செயலி கிராபிக்ஸ் திறனை மொபைலில் மேம்படுத்தி வழங்குவதால், மொபைல் கேமர்களுக்கு இது சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
Tags:    

Similar News