செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் திரவ உயிர் உரம் உற்பத்தி

Published On 2021-09-06 08:12 GMT   |   Update On 2021-09-06 08:12 GMT
வேளாண்மை துறை சார்பில் தயாரிக்கப்படும் உயிர் உரம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண் மையத்தில் திட வடிவ உயிர் உர உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

இங்கு ரூ.1.30 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த ஜூலை முதல்  திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவிநாசி உதவி வேளாண் இயக்குனர் அருள்வடிவு, உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் சங்கீதா ஆகியோர் கூறுகையில்: 

உலகதரத்தில் தொழில்நுட்ப உதவியுடன் உயிர் உரம் தயாரிக்கப்படுகிறது. நுண்ணீர் மற்றும் சொட்டுநீர் பாசனம் வழியாகவே இந்த உரத்தை செலுத்த முடியும் என்பதால் அவை வீணாகாது. முழு பலன் தரும்.

20 முதல் 40 சதவீதம் வரை மகசூல் கூடுதலாக கிடைக்கும். மண் வளமும் பாதுகாக்கப்படும். உரத்தை ஓராண்டு வைத்து பயன்படுத்தலாம் என்றனர்.
Tags:    

Similar News