தொழில்நுட்பம்
எம்ஐ 11 அல்ட்ரா

முன்னணி வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எம்ஐ 11 அல்ட்ரா

Published On 2021-04-08 04:19 GMT   |   Update On 2021-04-08 04:19 GMT
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.


இந்திய சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஐ 11 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், வளைந்த 120 ஹெர்ட்ஸ் QHD+ டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார், பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளது.



இந்தியாவில் புதிய எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 70 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், விலை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சீன சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் எத்தனை வேரியண்ட் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Tags:    

Similar News