செய்திகள்
கோடை வெயில்

மதுரையில் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2021-04-28 10:23 GMT   |   Update On 2021-04-28 10:23 GMT
மதுரை மாநகரில் சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல பொதுமக்கள் தற்போது மர நிழலை தேடி அலைகின்றனர்.
மதுரை:

தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் கொடுமை அதிகரித்துள்ளது. அதிகாலையிலேயே புழுக்கம் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

காலை 8 மணி முதலே வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் குழந்தைகள், வேலைக்கு செல்வோர், முதியவர்கள், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மாலை நேரத்தில் மழை பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நேற்று முன்தினம் அலங்காநல்லூர் பகுதியில் சாரல் மழை பெய்தது. வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் குளிர்பானம், இளநீர், பதநீர், ஜிகர்தண்டா கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.

மதுரை மாநகரில் சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல பொதுமக்கள் தற்போது மர நிழலை தேடி அலைகின்றனர்.

பஸ் நிறுத்தங்களிலும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பயணிகள் நிழற்கூடங்களில் தஞ்சம் புகுகின்றனர்.

Tags:    

Similar News