உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

Published On 2022-05-06 09:42 GMT   |   Update On 2022-05-06 09:42 GMT
கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று காலை  பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். 

விழாவையொட்டி 4-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நாளை (சனிக்கிழமை)  மறு பூஜை நடக்கிறது.
Tags:    

Similar News