ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று சிவராத்திரி விழா

Published On 2021-03-11 05:41 GMT   |   Update On 2021-03-11 05:41 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு முதல் கால பூஜையும்,. 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பின் சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது.
Tags:    

Similar News