தொழில்நுட்பம்
லாவா அக்னி 5ஜி

மீடியாடெக் பிராசஸருடன் உருவாகும் லாவா 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-10-28 14:07 GMT   |   Update On 2021-10-28 14:07 GMT
லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட லாவா அக்னி 5ஜி நவம்பர் 9 ஆம் தேதி அரிமுகமாகிறது. 

புதிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று சென்சார்கள், முன்புறம் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படுகிறது.



இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய லாவா அக்னி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறம் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News