செய்திகள்
கோப்பு படம்

பாலியல் துன்புறுத்தல் - ஆசிரியர் மீது தலைமையாசிரியை பரபரப்பு புகார்

Published On 2019-10-15 09:04 GMT   |   Update On 2019-10-15 09:04 GMT
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது தலைமையாசிரியர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் நிர்வாகி இறந்து விட்டதால், அவர்களின் வாரிசுகள் பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.

தற்போது தலைமையாசிரியையாக ராஜேஸ்வரியும், செங்குட்டுவன் என்ற ஆசிரியரும், மற்றொரு பெண் ஆசிரியரும் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

இந்தநிலையில் பள்ளியின் நிர்வாகி இறந்த பின்னர் அவருடைய வாரிசுகள் சரிவர பள்ளியை நிர்வகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செங்குட்டுவன், இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்றுவதற்கான முயற்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, தளவாய் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதில் பள்ளி கழிப்பிடத்திற்கு சென்ற போது அங்கு நின்றிருந்த ஆசிரியர் செங்குட்டுவன், தனது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையெடுத்த தளவாய் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.அப்போது திடீரென தலைமையாசிரியை ராஜேஸ்வரி தனது புகாரை வாபஸ் பெறுவதாக கூறி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஊறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News