தொழில்நுட்பம்
ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

Published On 2019-08-17 06:14 GMT   |   Update On 2019-08-17 06:14 GMT
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 224 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.



பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

புதிய சலுகை புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தது. தற்சமயம் கூடுதல் சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் வலைத்தளத்தின்படி புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் பயனர்கள் தேர்வு செய்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது மட்டும் வழங்கப்படுகிறதா அல்லது அனைத்து சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு 84 நாட்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை மாதத்தில் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. கேஷ்பேக் சலுகை ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News