வழிபாடு
திருவாலங்காடு ஸ்ரீவடராண்யேஸ்வரர் கோவில்

திருவாலங்காடு ஸ்ரீவடராண்யேஸ்வரர் கோவிலில் நாளை இரவு ஆருத்ரா அபிஷேகம்

Published On 2021-12-18 07:42 GMT   |   Update On 2021-12-18 07:42 GMT
ஆருத்ரா அபிஷேக விழா தொடக்கத்தில் விபூதி அபிஷேகத்துடன் தொடங்கி 11 வகையான திரவ பொருள்கள், 21 வகையான பழங்களை கொண்டு ஆருத்ரா அபிஷேகம் விடிய விடிய நடைபெறும்.
திருவள்ளூரை அடுத்த  திருவாலங்காட்டில் உள்ள முதல் சபையான ரத்தின சபை திருவாலங்காடு ஸ்ரீ வடராண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி மாணிக்கவாசகர் உற்சவம் நடந்தது.

விழாவின் 9-வது நாளான நாளை (ஞாயிறு) இரவு 9 மணிக்கு பழைய ஆருத்ரா மண்டபத்தில் உற்சவர் நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.
இந்தாண்டின் ஆருத்ரா அபிஷேக விழா குறைந்த அளவு பக்தர்கள் கொண்டு எளிமையான முறையில் நடைபெறுகிறது.

ஆருத்ரா அபிஷேக விழா தொடக்கத்தில் விபூதி அபிஷேகத்துடன் தொடங்கி பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவ பொருள்கள், மாதுளம் மாம்பழம், வாழைப்பழம் திராட்சை உள்ளிட்ட 21 வகையான பழங்களை கொண்டு ஆருத்ரா அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். பின்னர் சர்வ அலங்காரம் செய்ய பெற்று அதிகாலை 4. 45 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

அதை தொடர்ந்து நாளை மறுநாள் (20-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 21-ந் தேதி காலை, 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் லக்ஷ்மணன், கோவிலின் தலைமை குருக்கள் சபாரத்தினம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News