உள்ளூர் செய்திகள்
வட்ட மலை அணையில் நிரம்பிய தண்ணீரை படத்தில் காணலாம்.

வெள்ளகோவில் வட்ட மலை அணைக்கு 200 கனஅடி நீர் வரத்து

Published On 2021-12-08 07:09 GMT   |   Update On 2021-12-08 07:09 GMT
கடந்த மாதம் 28ம் தேதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் சட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1980ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அணை கட்டப்பட்டது. அதற்கு பின் 3 முறை மட்டுமே வட்ட மலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் வந்தது.

அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் வட்டமலை கரை ஓடைஅணை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட கோரி அரசிடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் சட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 1ம் தேதி மாலை வட்டமலை கரை ஓடை அணைக்கு வரத்தொடங்கியது. அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.

தற்போது சராசரி 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. 45 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. அணையின் கொள்ளளவு 268 மில்லியன் கனஅடி ஆகும்.
Tags:    

Similar News