செய்திகள்
ஜம்யாங் செரிங் நம்கியால்

பேஸ்புக்கில் தற்போது 5000 பேரை தாண்டிய பிரெண்ட் ரெக்வஸ்ட்.. -லடாக் பாஜக எம்.பி

Published On 2019-08-08 05:33 GMT   |   Update On 2019-08-08 05:33 GMT
லடாக்கின் பாஜக எம்.பிக்கு தற்போது 5000 பேரை தாண்டி முகநூலில் பிரெண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
புது டெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடந்து எழுந்து வருகிறது. இது குறித்து மாநிலங்களவையில் விவாதம் தொடந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் லடாக் பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால்(34) மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில், '70 ஆண்டுகளாக லடாக் மக்கள் இதற்காக போராடி வருகின்றனர்.

லடாக் தற்போது வளர்ச்சியின்றி இருக்கிறது என்றால் அதற்கு 370 சட்டப்பிரிவும், காங்கிரஸ் கட்சியும்தான் முழு காரணம். மெகபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.



ஆனால், அவர்களின் பதவிகளுக்கு என்று வரும்போது அவர்கள் போட்டியிடுவார்கள். காஷ்மீரையே அவர்கள் இருவரும்,  தங்கள் மூதாதையர் சொத்து என நினைக்கின்றனர். அது உண்மை அல்ல' என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்திருந்தார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் மோடி பதிவிட்டிருந்தார். இந்த பேச்சுக்கு பின்னர் அவரது முகநூல் பக்கத்தில் 2 நாட்களில் வந்த பிரெண்ட் ரெக்வஸ்ட் ஐயாயிரத்தை தாண்டியதால், அனைவரும் பக்கத்தை லைக் செய்து என்னை பின் தொடருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News