செய்திகள்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

631 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்-தண்டோரா மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு

Published On 2021-09-12 09:38 GMT   |   Update On 2021-09-12 09:38 GMT
கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவில் மைக் கட்டி, முன்னறிவிப்பு செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 631 மையங்களில் கொரோனா தடுப்பூசி  முகாம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், ரெயில் நிலையம், பஸ்  நிலையம், சுங்கச்சாவடி மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் முகாம் நடைபெற்றது.

தடுப்பூசி பணியில் பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், தன்னார்வலர் என  3,740 பேர் ஈடுபட்டனர். ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக தலா 2 தன்னார்வ இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள்   செல்போன் வாயிலாக பதிவு பணியை மேற்கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவில் மைக் கட்டி, முன்னறிவிப்பு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் ‘தண்டோரா’ மூலம் வீதி வீதியாக கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மதியம்வரை பிரசாரம் செய்யப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாமில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகரில்  45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலையில் இருந்தே பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
Tags:    

Similar News