செய்திகள்
நிவர் புயல்

அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2020-11-24 18:12 GMT   |   Update On 2020-11-24 18:12 GMT
தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை, சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வட திசையில் கடலூருக்குக் தென்கிழக்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 350 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  

சென்னையில் இருந்து 410 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News