தொழில்நுட்பச் செய்திகள்
கோப்புப்படம்

இனி ஒரு நம்பர் போதும் - கோவின் சேவையில் புது அப்டேட் வெளியீடு

Published On 2022-01-24 05:07 GMT   |   Update On 2022-01-24 05:07 GMT
கோவின் தளத்தில் இனி ஒற்றை நம்பர் பதிவு செய்து ஆறு பயனர்களை இணைக்கும் வசதி வழங்கப்படுகிறது.


இந்தியா முழுக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.



தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் பெயர், தொலைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கோவின் தளத்தில் மத்திய அரசு புது மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. 

தடுப்பூசி செலுத்திய பின் அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி எண்றிற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை வைத்து சான்றிதழை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி நான்கு நபர்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில் கோவின் தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

தற்போதைய மாற்றங்களின் படி கோவின் வலைதளத்தில் ஒரு மொபைல் எண் கொண்டு ஆறு பேருக்கு முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News