செய்திகள்
மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய விழைகிறேன் - மு.க.ஸ்டாலின்

Published On 2021-04-20 12:11 GMT   |   Update On 2021-04-20 13:42 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் ராகுல் காந்தி முழு ஆரோக்கியத்துடன் விரைவாக குணமடைய விரும்புகிறேன் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு (வயது 50) கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விரைந்து குணமடைய விழைகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்தி முழு ஆரோக்கியத்துடன் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News