செய்திகள்
சதமடித்த பவாத் ஆலம்

பவாத் ஆலம் அபார சதம் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302/9

Published On 2021-08-22 23:17 GMT   |   Update On 2021-08-22 23:17 GMT
வெஸ்ட் இண்டீசுடனான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானின் பவாத் ஆலம் பொறுப்புடன் ஆடி சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஜமைக்கா:

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.

அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் அசாம் அரை சதமடித்து 75 ரன்னில் அவுட்டானார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 74 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.



இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பஹீம் அஷ்ரப் 26 ரன்னிலும், ரிஸ்வான் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.

நவ்மான் அலி டக் அவுட்டானார். ஹசன் அலி 9 ரன்னிலும்,  ஷஹீன் அப்ரிடி 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். காயத்தில் இருந்த பவாத் ஆலம் மீண்டும் இறங்கி பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 18 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News