உள்ளூர் செய்திகள்
தெப்ப உற்சவ விழா நடைபெற்ற காட்சி.

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா

Published On 2022-01-21 10:10 GMT   |   Update On 2022-01-21 10:10 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி:

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அமைந்துள்ளதும், தமிழகத்தின் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்றதுமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். 

இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு சித்திர சபையில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரை மேளதாளங்கள் முழங்க சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது.கொரோனா பரவல் காரணமாக விழாவில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Tags:    

Similar News