தொழில்நுட்பச் செய்திகள்
விவோ பேட் மற்றும் ஃபோல்டபிள் போன்

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போகும் விவோ

Published On 2022-03-23 04:59 GMT   |   Update On 2022-03-23 04:59 GMT
விவோ எக்ஸ்80 சீரிஸில் விவோ எக்ஸ்80, எக்ஸ்80 ப்ரோ மற்றும் எக்ஸ்80 ப்ரோ+ என்ற 3 போன்கள் இடம்பெறவுள்ளன.
விவோ நிறுவனம் விவோ எக்ஸ் நோட், விவோ எக்ஸ் ஃபோல்ட், விவோ பேட் மற்றும் விவோ எக்ஸ்80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் விவோ எக்ஸ் நோட் 7 இன்ச் 2கே சாம்சங் E5 AMOLED டிஸ்பிளே, 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 3டி அல்ட்ராசோனிக் வைட் ஏரியா ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் Samsung S5KGN1 பிரைமரி சென்சார், 48-மெகாபிக்ஸல் Sony IMX598 சென்சார், 12-மெகாபிக்ஸல் Sony IMX663 சென்சார் மற்றும் 8-மெகாபிக்ஸல் OV08A10 சென்சார் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்  Snapdragon 8 Gen 1 SoC-ல் இயங்கும் என்றும், 5000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

விவோ நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED பிரைமரி டிஸ்பிளே மற்றும் 8 இன்ச் ஃபோல்டபிள் டிஸ்பிளே இடம்பெறவுள்ளது. மேலும் இதில் குவாட் பின்பக்க கேமராக்களும், 4600mAh பேட்டரியும் தரப்படவுள்ளன.

இத்துடன் விவோ தனது முதல் டேப்லெட்டான விவோ பேடையும் அறிமுகம் செய்யவுள்ளது. அதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் சிப்செட் மற்றும் 8040mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இதைத்தவிர விவோ எக்ஸ்80 சீரிஸையும் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் விவோ எக்ஸ்80, எக்ஸ்80 ப்ரோ மற்றும் எக்ஸ்80 ப்ரோ+ என்ற 3 போன்கள் இடம்பெறவுள்ளன. 
Tags:    

Similar News