செய்திகள்
பொங்கல் விழா கொண்டாடிய நடிகை ரோஜா.

ஆந்திரா தலைநகர் பிரச்சனை- சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு

Published On 2020-01-13 05:39 GMT   |   Update On 2020-01-13 09:23 GMT
ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நகரி:

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா தனது அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழாவை கொண்டாடினார்.

நகரியில் நடைபெற்ற விழாவில் அவர் தனது கணவர் செல்வமணி, குழந்தைகளுடன் கலந்து கொண்டார். விழாவையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டி, குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கோலாட்டம் உள்ளிட்ட கலை நிழ்ச்சிகளும் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை ரோஜா பரிசுகள் வழங்கினார்.

பின்னர் நடிகை ரோஜா பேசியதாவது:-

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைத்தால் மாநிலம் முன்னேறும். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினர் அமராவதியில் தலைநகர் அமையும் என கருதி அங்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர். அதனால்தான் தலைநகரை மாற்றக்கூடாது என்கின்றனர்.

சந்திரபாபு நாயுடு மக்கள் நலனுக்காக போராடவில்லை. தனதுசொந்த நலனுக்காகத்தான் போராடுகிறார். 3 தலைநகரங்கள் அமைந்தால் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும். எனவே 3 தலைநகரங்கள் அமைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும்.

ஜனசேனா தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் தத்துப்பிள்ளை போல செயல்படுகிறார். அவருக்கென்று ஒரு கொள்கை இல்லை. இவர்கள் இருவராலும் மாநிலத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

தெலுங்கு தேசம் கட்சி எதற்காக தேர்தலில் தோல்வியை தழுவியது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



பொங்கல் ஒரு கலாசார விழா. மேலை நாட்டு கலாசார மோகத்தில் இருந்து மக்கள் மீண்டு கலாசார விழாக்களை கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு கலாசார விழா கொண்டாட்டங்களின் பின்னணியிலும் அறிவியல் ரீதியாக ஒரு வி‌ஷயம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News