இந்தியா
கொரோனா உயிரிழப்பு

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2022-01-25 03:19 GMT   |   Update On 2022-01-25 03:19 GMT
பெங்களூருவில் நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 46 ஆயிரத்து 426 ஆக பதிவானது. ஆனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 46 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 21 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாகல்கோட்டையில் 291 பேர், பல்லாரியில் 817 பேர், பெலகாவியில் 625 பேர், பெங்களூரு புறநகரில் 1,607 பேர், பீதரில் 284 பேர், சாம்ராஜ்நகரில் 656 பேர், சிக்பள்ளாப்பூரில் 905 பேர், சிக்கமகளூருவில் 144 பேர், சித்ரதுா்காவில் 642 பேர், தட்சிண கன்னடாவில் 655 பேர், தாவணகெரேயில் 467 பேர், தார்வாரில் 1,407 பேர், கதக்கில் 257 பேர், ஹாசனில் 1,908 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஹாவேரியில் 304 பேர், கலபுரகியில் 379 பேர், குடகில் 657 பேர், கோலாரில் 661 பேர், கொப்பலில் 525 பேர், மண்டியாவில் 1,837 பேர், மைசூருவில் 4,105 பேர், ராய்ச்சூரில் 281 பேர், ராமநகரில் 288 பேர், சிவமொக்காவில் 537 பேர், துமகூருவில் 2,960 பேர், உடுப்பியில் 677 பேர், உத்தர கன்னடாவில் 626 பேர், விஜயாப்புராவில் 270 பேர், யாதகிரியில் 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 6 கோடியே 69 லட்சத்து 5 ஆயிரத்து 857 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 64 ஆயிரத்து 108 ஆக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு நகரில் 9 பேர், தட்சிண கன்னடா, மைசூரு, உடுப்பியில் தலா 3 பேர், ஹாவேரி, கலபுரகியில் தலா 2 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகர், கதக், ஹாசன், மண்டியா, ராய்ச்சூர், ராமநகர், சிவமொக்கா, துமகூரு, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என 32 பேர் உயிரிழந்தனர். 14 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 614 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர். நேற்று 41 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை 31 லட்சத்து 62 ஆயிரத்து 977 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 3 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு 32.95 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.06 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக 50 ஆயிரத்து 210 பேருக்கு பாதிப்பு உறுதியானது. நேற்று பாதிப்பு சற்று குறைந்து 46 ஆயிரத்து 426 ஆக பதிவானது. ஆனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News