ஆன்மிகம்
மாரியம்மன் கோவில் முன் வைக்கப்பட்டு உள்ள அறிவிப்பு பலகையை படத்தில் காணலாம்.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மீண்டும் தள்ளிவைப்பு

Published On 2021-04-15 08:19 GMT   |   Update On 2021-04-15 08:19 GMT
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளித் தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடத்தப்படும். இதையொட்டி கோவில் முன் கம்பம் நடுவது கொடி கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு பூவோடு எடுத்து வருவார்கள். மேலும் 3 நாட்கள் வெள்ளித்தேரோட்டம், விநாயகர் தேரோட்டம் நடத்தி திருவிழா கொண்டாடப்படும்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மாசி மாதம் திருவிழா நடக்கவில்லை. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் வருகிற 20-ந்தேதி சாட்டப்படுவதாக இருந்த மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அரசு உத்தரவுபடி தள்ளி வைக்கப் படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News