செய்திகள்
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு

Published On 2021-04-13 06:29 GMT   |   Update On 2021-04-13 06:29 GMT
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

சென்னை:

தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58 ஆகவும், டீசல் விலை ரூ.85.88 ஆகவும் உள்ளது.

சில மாநிலங்களில் உள்ளூர் வரியுடன் சேர்த்து ரூ.100-க்கு மேல் பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி முதல் தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

அதே நேரத்தில் சில முறை பெட்ரோல், டீசல் விலை சற்று குறைக்கப்பட்டது. தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த 14 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இத்தனைக்கும் சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணையின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டுமே 0.15 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 63.37 டாலராக இருக்கிறது.

ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்னும் தேர்தல் முடியவில்லை. அங்கு 29-ந்தேதி தான் தேர்தல் முடிகிறது.

தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை என்று கருதப்படுகிறது. எனவே தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News