ஆன்மிகம்
தடையை மீறி தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் பகுதிக்கு வருகை தந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

சதுரகிரிக்கு செல்ல தடையை மீறி குவிந்த பக்தர்கள்

Published On 2020-11-16 09:24 GMT   |   Update On 2020-11-16 09:24 GMT
சதுரகிரிக்கு செல்ல தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். இந்தநிலையில் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 12-ந்தேதி பிரதோஷத்தன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று வந்தனர். 13-ந் தேதி மலைப்பகுதியில் பெய்த மழையால் மண்சரிவு காரணமாகவும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல 14, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 14-ந்தேதி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு அதிகாலை முதலே வருகை தந்து குவிந்தனர்.மழை மற்றும் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூறியதை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு பக்தர்கள் கேட்டிற்கு முன்பு சாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Tags:    

Similar News