ஆன்மிகம்
கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹார விழா

கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹார விழா

Published On 2020-11-17 08:27 GMT   |   Update On 2020-11-17 08:27 GMT
புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 20-ந்தேதி காலை திருத்தேர் வீதி உலாவும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 68-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு யானை முகன் சம்ஹாரம் நடக்கிறது. 19-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு வேல் வாங்குதலும், சிங்கமுகன் சம்ஹாரமும் நடக்கிறது. 20-ந்தேதி காலை திருத்தேர் வீதி உலாவும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும் நடக்கிறது.

21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 28-ந்தேதி (சனிக் கிழமை) இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலாவும், 29-ந்தேதி இரவு 7 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவும், 1-ந்தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

மறுநாள் 2-ந்தேதி காலையில் வீரபாகு உற்சவமும், இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளவேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News