ஆன்மிகம்
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-04-13 05:49 GMT   |   Update On 2021-04-13 05:49 GMT
பங்குனி மாத அமாவாசையையொட்டி அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பங்குனி மாத அமாவாைசயையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆஞ்சநேயருக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை, துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவிலான பக்தர்கள் முக கவசம் அணிந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

இதேபோல் செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News