செய்திகள்
நிதின் கட்காரி

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-16 16:33 GMT   |   Update On 2020-09-16 16:33 GMT
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியான நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிதின் கட்காரி. இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News