செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

ஆக்சிஜன் சப்ளையை தடுப்பவர்களை தூக்கில் போடுவோம் -எச்சரிக்கை விடுத்த டெல்லி ஐகோர்ட்

Published On 2021-04-24 12:19 GMT   |   Update On 2021-04-24 12:19 GMT
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக விமானத்தை அனுப்பி ஆக்சிஜன் கொண்டுவரச் செய்திருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிடக் கோரி டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு ஆகியோர் முன் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. ‘

மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்கறிஞர் அலோக் அகர்வால் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “மனுதாரர் மருத்துவமனையில் 306 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துமனையில் நேற்று இரவே ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது.

டெல்லி அரசின் உதவியால் ஆக்சிஜன் பெற்றுள்ளோம், அதுவும் இன்று பிற்பகலில் தீர்ந்துவிடும். அதன்பின் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். டிஸ்சார்ஜ் செய்யத் தொடங்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “நாள்தோறும் இதே கதையைத்தான் கேட்கிறோம். ஆக்சிஜன் சப்ளையில் சூழல் இப்போது என்ன?” எனக் கேட்டனர்.

மத்திய அரசு சார்பில் பொறுப்பு அதிகாரியான பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து வருகிறோம். டெல்லி அரசுடன் பணியாற்றி வருகிறோம். விமானத்தை அனுப்பி ஆக்சிஜன் கொண்டுவரச் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசு தரப்பில் வழக்கறிஞர் மேஹ்ரா ஆஜராகினார். அவர் கூறுகையில் “டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. ஆனால், 350 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளது. அதிலும் நேற்று 295 மெட்ரிக் டன் மட்டுமே வந்துள்ளது. டெல்லிக்கு மொத்தம் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கட்டாயம் தேவை.

இல்லாவிட்டால், 24 மணிநேரத்தில் மாநிலத்தின் சுகாதார அமைப்பு உருக்குலைந்துவிடும். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் நிலைமை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், ஏதாவது மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” எனத் தெரிவி்த்தார்.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், “மேத்தா, எப்போது டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும்? சரியான தேதியைக் கூறுங்கள். மத்திய அரசு பணியாற்றவில்லை என்று யாரும் குற்றம்சாட்டவில்லை. அதேநேரம், கூட்டம் கூட்டமாக மக்கள் மடிவதை யாரும் பார்க்கவும் முடியாது” என்று கூறினர்.

மேலும், ஆக்சிஜன் சப்ளையை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம்” என நீதிபதிகள் கூறியதாகவும் தெரிகிறது.
Tags:    

Similar News