ஆன்மிகம்
பாமா, ருக்மணி

பாமா, ருக்மணிக்கு முக்கியத்துவம் தரக்காரணம்

Published On 2021-09-25 05:56 GMT   |   Update On 2021-09-25 05:56 GMT
பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்தில் உள்ள லட்சுமியிடம் எடுத்து சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள்
கிருஷ்ணருடன், பாமா, ருக்மணி ஆகியோர் இணைந்து காட்சி தருவர். விஷ்ணு சகஸ்ர நாமத்தில் “ஸத்ய பாமாப்யாம் ஸஹிதயும் கிருஷ்ணமாச்ரயே” என்ற சுலோகம் வருகிறது. இதன் அடிப்படையில் தென்னகத்தில் பாமா ருக்மணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாமா “ பூமாதேவி” அம்சம் என்றும் ருக்மணி “லட்சுமி” அம்சம் என்றும் கூறுவதுண்டு.

பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்தில் உள்ள லட்சுமியிடம் எடுத்து சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள். எனவே ஸ்ரீகிருஷ்ணரை பாமா, ருக்மணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வடமாநிலங்களில் ருக்மணியும், சத்யபாமாவும் இணைந்த வடிவத்தை “ராதை” எனக்கருதி ராதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

Tags:    

Similar News