செய்திகள்
வாழைத்தார்

பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

Published On 2020-10-15 10:10 GMT   |   Update On 2020-10-15 10:10 GMT
பரமத்திவேலூர் மார்க்கெட்டில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் நல்ல விலைக்கு ஏலம்போனது. வாழைத்தார்கள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தனூர், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்திவேலுாரிலுள்ள ஏல மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுத்த வியாபாரிகள், தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினந்தோறும் இப்பகுதியில் இருந்து பஸ்கள், லாரிகள் மூலம் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.200-க்கும், பச்சைநாடன்தார் ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும், மொந்தன் ஒரு காய் ரூ.4-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் தார் ரூ.350-க்கும், ரஸ்தாளி தார் ரூ.350-க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.250-க்கும், மொந்தன் ஒரு காய் ரூ.6-க்கும் ஏலம்போனது. வாழைத்தார்கள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News