ஆட்டோமொபைல்
ஓலா எலெக்ட்ரிக்

ஓலா எஸ்1 சீரிஸ் உற்பத்தி துவக்கம்

Published On 2021-10-30 12:22 GMT   |   Update On 2021-10-30 12:22 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. ஓலா எஸ்1 சீரிஸ் டெஸ்ட் ரைடுகள் நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக உற்பத்தி பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டது.

இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 121 கிலோமீட்டர் மற்றும் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இரு ஸ்கூட்டர்களும் முறையே அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் மற்றும் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Tags:    

Similar News