லைஃப்ஸ்டைல்
வெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...

வெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...

Published On 2019-08-17 07:46 GMT   |   Update On 2019-08-17 07:46 GMT
வெண்புள்ளி நோயை பொறுத்தவரை உடலோடு கலந்திருக்கும் நுண்ணிய நச்சு ஆற்றலை மருந்துகள் மூலம் உடலில் நுண் ஆற்றலை உருவாக்கினால் மட்டுமே குணமாகும்.
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைந்த தினத்தை உலக வெண்புள்ளி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு பலனளிக்கவில்லை.

வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டவுடன் நோயாளிகள் முதலில் நாடுவது ஆங்கிலம் மருத்துவம்தான் பின்னர் ஆயுர்வேதம். சித்தா, யுனானி, ஓமியோபதி என்று சிறிது காலம் சிகிச்சை பெறுவார்கள். அதிலும் காலதாமதம் ஆனால் எனக்கு சிகிச்சையே வேண்டாம் என்று விரக்கியுடன் நிறுத்திவிடுவார்கள்.

வெண்புள்ளி நோய் தீராத வியாதியா? என்ற கேள்வியை அனைவர் மனதிலும் வித்திட்டு விடை காண முடியாமல் தவிப்பதை உணரமுடியும். என் மகன், மகளின் திருமணம் பாதிக்கப்படுமோ என்று வெதும்பும் தாயின் குமுறல் மருத்துவர்களால் உணர முடிகிறது. எனக்கு சரியான வாழ்க்கை துணையில்லை என்று மனைவியுடன் சண்டையிடுவது அன்றாட நிகழ்வுகளில் உண்டு. நாள்தோறும் நண்பர்ளோடும், உறவினர்களோடும் பழகமுடியாமல் மன விரக்தியில் கண்ணீர் விடுவதும் உண்டு. உண்மையிலேயே இந்த வெண்புள்ளி நோய் நிறமாற்றமே! இது ஒரு கிருமிகளால் ஏற்படுவது அல்ல! எனவே ஒருவருக்கொருவர் நிச்சயம் பரவாது. உடல் இயக்கத்தை பாதிக்கும்; நோயும் அல்ல!.

வெண்புள்ளி தோன்ற காரணம் நமது தோலுக்கு நிறத்தை அளிக்க கூடிய “மெலானோசைட்“ எனப்படும் செல் அணுக்கள் செயல்பாடு குன்றுவதால் தான் இதன் நிறமி அணுக்கள் தோலுக்கு அடிப்பகுதியில் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் சத்தை எடுத்துக்கொண்டு நிறமி சத்தாக மாறி ஒரே சீராக அனுப்புகின்றன. நிறமி அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து சிவப்பாகவும், கருப்பாகவும் தோற்றமளிக்கிறோம்.

மருத்துவ ஆராய்ச்சியில் நிறமி செல் அணுக்களின் செயல்பாட்டை தடுக்க பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் முதன்மையான காரணமாக கருதப்படுவது சுயநோய் எதிர்ப்பு திறன் குறைவால் உருவாகும் என்பது அனைத்து மருத்துவமுறைகளும் ஒத்துக்கொண்டுள்ளன. மேலும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் போது நமது உடலில் ஏற்படும் எதிர்ப்பு சத்து உருவாகி நிறமி அணுக்களை தவறுதலாக தாக்குவதும் முக்கியமான காரணம். மெலானோசைட் நிறமி செல் அணுக்களை உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் செல் அணுக்கள் என்று நோய் எதிர்ப்பு திறன் செல்கள் தவறாக அழிந்துவிடும். எனவே வெண்புள்ளிகள் தோன்றிவிடும்.

மேலும் பூச்சிக்கடிகள் மூலம் உடலில் செலுத்தப்படும் நச்சு தன்மையாலும் நிறமி அணுக்கள் செயல்பாடுகள் குறைவதை பார்க்க முடியும். இதற்கு உதாரணமாக தேனீ பூச்சி கடித்தால் ஏற்படும் நச்சுத்தன்மை நாளடைவில் வெண்புள்ளி நோய் தோன்றி இருக்கிறது. இது சரியான ஓமியோபதி மருந்துகளால் குணப்படுத்தப்பட்டுள்ளது. குடலில் உள்ள பூச்சி புழுக்களின் கழிவுகள் கூட நிறமி அணுக்களை தாக்கலாம்.

இன்றைய துரித வாழ்க்கையில் இயந்திரமாக, இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ரசாயன பொருள்கள் இல்லாத உணவு வகைகள் இல்லை. அழகு சாதனங்கள், மருந்துகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள். குளிர்பானங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ரசாயன பொருட்களும் நிறமி அணுக்களை தாக்கக்கூடிய சாத்திய கூறுகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு திறனுக்கும் சவாலாக உள்ளது என்றால் மிகையாகாது.

உடல் இயக்க நோய்களான தைராய்டு கோளாறுகள், உடல் கோளாறுகள் வெண்புள்ளிகளை உருவாக்கி உள்ளது. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வெண்புள்ளிகள் தோன்றியதுண்டு. பரம்பரை தன்மையும் இதற்கு ஒரு காரணம். இப்படி இதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படையான காரணமாக கருதப்படுவது நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் தான் ஏற்படுகிறது.

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வெண்புள்ளி நோயாளிக்கும் நச்சுதன்மை ஏற்பட்டு ஒவ்வாமை தன்மையாக மாறி, நிறமி அணுக்களை பாதிக்கிறது. அதுவும் அணுசக்தியின் ஆற்றல் போல உடலில் புகுந்து தன் வேலைகளை காண்பிக்க ஆரம்பித்து வருகிறது. எனவே தான் சரியான சிகிச்சை பெறாமல் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். குணம் பெறுவது கடினமாக உள்ளது. வெண்புள்ளி குணமாக மூலப்பொருட்களை மருந்தாக கொடுத்து குணமாக்க முடியாது. வெளிபூச்சு மருந்துகள் பலன் அளிக்காது. சூரிய ஒளியில் நின்றதால் தோன்றிய கரும்புள்ளிகள் மறைந்துவிடும். அறுவை சிகிச்சை முறைகளும் பொருத்தமாக இருக்காது!.

வெண்புள்ளி நோயை பொறுத்தவரை உடலோடு கலந்திருக்கும் நுண்ணிய நச்சு ஆற்றலை மருந்துகள் மூலம் உடலில் நுண் ஆற்றலை உருவாக்கினால் மட்டுமே குணமாகும். இது கிட்டத்தட்ட “முள்ளை, முள்ளால் எடுப்பது” போலதான். எனவே தான் ஓமியோபதி மருத்துவத்திற்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. ஓமியோபதி மருந்துகள் மூலம் மூலப்பொருட்களுக்காக அளிக்கப்படுவதில்லை.

வீரியப்படுத்தப்பட்டு நுண்ணாற்றலாகத்தான் அளிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் இருப்பதில்லை. உலக வெண்புள்ளி நோய் தினமாக இன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தவறான கருத்துகள் பல உள்ளன. அவைகளில் முதல் கருத்து தொற்று வியாதியல்ல, ஒரு அழகு குறைபாடு மட்டுமே! அனைவரும் சகலமாக பழகலாம், விளையாடலாம். வெண்புள்ளி நோய் குணமாக சரியான சிகிச்சை முறையை தேர்தெடுத்து பலன் பெறுங்கள்.

டாக்டர் ஆர். ஞானசம்பந்தம் தலைவர், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்.
Tags:    

Similar News