ஆட்டோமொபைல்
2021 போர்ஷ் பனமெரா ஃபேஸ்லிப்ட்

2021 போர்ஷ் பனமெரா ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2020-08-27 11:15 GMT   |   Update On 2020-08-27 11:15 GMT
போர்ஷ் நிறுவனத்தின் புதிய 2021 பனமெரா ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


போர்ஷ் நிறுவனம் தனது பனமெரா மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து உள்ளது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் பனமெரா இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. 

பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள போர்ஷ் பனமெரா ஃபேஸ்லிப்ட் மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் சக்தி வாய்ந்த டர்போ எஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டான்டர்டு, எக்சிக்யூட்டிவ் மற்றும் ஸ்போர்ட் டூரிஸ்மோ என மூன்றுவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.



போர்ஷ் பனமெரா டர்போ எஸ் வேரியண்ட்டில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 630 பிஹெச்பி பவர் மற்றும் 820 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் டர்போ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News