ஆன்மிகம்
பனிமயமாதா

புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-08-29 04:56 GMT   |   Update On 2019-08-29 04:56 GMT
கீழ ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிபள்ளத்தில் உள்ள புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா 10 நாட்கள் நடக்கிறது.

நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவில் வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி, 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை ஆன்றனி கிளாரட் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, காலை 10 மணிக்கு வளனார் தேர் பவனி, மாலை 6.15 மணிக்கு சூசை தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

8-ந்தேதி காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, 10 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிபிச்சை மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News