செய்திகள்
தடை செய்யப்பட்ட சிறார் ஆபாசப்படம்

சிறார்களின் ஆபாச வீடியோக்களை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

Published On 2019-10-14 15:12 GMT   |   Update On 2019-10-14 15:12 GMT
ஜெர்மனியில் தொடங்கி இந்தியா வரை பரவிய சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த 7 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

சிறுவர்-சிறுமிகளை உடலுறவில் ஈடுபட வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து இணையதளம் மற்றும் சி.டி.க்கள் மூலம் விற்பனை செய்யும் கும்பல்கள் உலகின் சில நாடுகளில்  இயங்கி வருகின்றன.

பல நாடுகளில் இதுபோன்ற வீடியோக்களை தடை செய்துள்ளன. இருப்பினும் நல்ல விலை கிடைப்பதால் மிகவும் ரகசியமாக இதுபோன்ற வக்கிரமான காட்சிகள் சிலர் மூலம் தங்குதடையின்றி பகிரப்பட்டு வருகிறது.



இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் இதுபோன்ற தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய அவருடன் தொடர்பில் இருந்த மற்ற 29 பேரைப் பற்றிய விசாரணையில் சிக்கியவர்களில் 7 பேரின் கைபேசி எண்கள் இந்தியாவை சேர்ந்தது என்பது ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைதொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அந்த கைபேசி எண்கள் தொடர்பான விபரம் கடந்த ஜனவரி மாதத்தில் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அந்த 7 கைபேசி எண்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News