சமையல்
கொய்யா குடைமிளகாய் சாலட்

கொய்யா குடைமிளகாய் சாலட்

Published On 2022-02-04 05:42 GMT   |   Update On 2022-02-04 05:42 GMT
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
தேவையான பொருட்கள்

கொய்யா - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
ஆப்பிள் - 1 சிறியது
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

செய்முறை

கொய்யாவை மெலிதாக நீளவாக்கில் வெட்டி கொட்டையை எடுத்து விடவும்.

வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

ஆப்பிளை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டிய கொய்யா, வெங்காயம், குடைமிளகாய், ஆப்பிளை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான கொய்யா குடைமிளகாய் சாலட் ரெடி.
Tags:    

Similar News