செய்திகள்
விஜயதசமியான இன்று மறுபூஜை செய்து பனியன் உற்பத்தியில் ஈடுபட்டதொழிலாளர்கள்.

ஆயுதபூஜை வழிபாடுக்கு பிறகு திருப்பூரில் பனியன் உற்பத்தி தீவிரம்

Published On 2021-10-15 12:01 GMT   |   Update On 2021-10-15 12:01 GMT
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருகின்றன.
திருப்பூர்:

திருப்பூரில் உள்நாடு, வெளிநாடு ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பனியன் தொழிற்சாலைகளில் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களை  சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . 

இங்கு வருடந்தோறும் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது  வழக்கம், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருகின்றன. 

இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ராக்கியாபாளையம், குமார் நகர்,  ஆலங்காடு , கருவம்பாளையம் , லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பனியன்எந்திரங்கள் சுத்தம் செய்து தொழிலாளர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

ஆயுதபூஜை வழிபாட்டின் போது பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் இன்று மறுபூஜை செய்யப்பட்டு பனியன் நிறுவனங்களில் பனியன் உற்பத்தி பணிகள் தொடங்கின. தீபாவளி ஆர்டர்கள் குவிந்துள்ளதால் உள்நாட்டு நிறுவனங்களில் ஆடை உற்பத்தி பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
Tags:    

Similar News