ஆன்மிகம்
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்

Published On 2020-09-05 03:57 GMT   |   Update On 2020-09-05 03:57 GMT
அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆரோக்கிய அன்னையை பிரார்த்தித்தனர்.
அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று காலை சிறப்பு திருப்பலியும், 6.45 மணிக்கு பங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. இதையொட்டி அங்கு வந்து இருந்த கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆரோக்கிய அன்னையை பிரார்த்தித்தனர்.

கொடியேற்றப்படுவதற்கு முன் ஆலயத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருகிற 8-ந் தேதி ஆரோக்கிய அன்னை பிறந்த நாளையொட்டியும், செப்டம்பர் 13-ந்தேதி தேதி ஆலயத்தின் ஆண்டு விழா நாளையொட்டியும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News