செய்திகள்
மீனவர்கள்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்

Published On 2021-11-18 02:46 GMT   |   Update On 2021-11-18 02:46 GMT
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் தற்போதைய தகவல்படி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிகிறது.

எனவே மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்லாமலும், அவர்களுடைய மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News