தொழில்நுட்பச் செய்திகள்
வி.எல்.சி மீடியா பிளேயர்

விஎல்சி மீடியா பிளேயர் மூலம் அரசாங்க நிறுவனங்களை கண்காணிக்கும் ஹேக்கர்கள்

Published On 2022-04-11 07:46 GMT   |   Update On 2022-04-11 07:46 GMT
இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.
விஎல்சி பிளேயர் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் விருப்பமான மீடியா பிளேயர் ஆகும். 

இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களை கொண்டதும் ஆகும்.

எல்லோருக்கும் விருப்பமான இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சிசாடா அல்லது APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், இந்தியா, மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.
Tags:    

Similar News