செய்திகள்
உலககோப்பை

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது

Published On 2019-07-14 18:15 GMT   |   Update On 2019-07-14 18:15 GMT
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்தின் ஸ்கோர் 103 ரன்களாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த டெய்லர் 15 ரன்னிலும், நீஷம் 19 ரன்னிலும் வெளியேறினார்கள். இறுதியில் நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிளெங்கட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனது. 
Tags:    

Similar News