உலகம்
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு

மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது

Published On 2022-01-08 02:07 GMT   |   Update On 2022-01-08 02:08 GMT
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மெக்சிகோசிட்டி :

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.

அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News