அழகுக் குறிப்புகள்
கடலை மாவு - மஞ்சள் பேஷியல்

கடலை மாவு - மஞ்சள் பேஷியல்

Published On 2021-12-08 07:32 GMT   |   Update On 2021-12-08 07:32 GMT
வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக் உங்கள் பார்வைக்கு...
சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக் உங்கள் பார்வைக்கு...

தேவையான பொருட்கள்:

கடலை மாவு -1 கப்

பொடித்த மஞ்சள்: சிறிதளவு

பால்- சிறிதளவு

செய்முறை:

மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.
Tags:    

Similar News