செய்திகள்
கோப்புபடம்

கடந்த 3 மாதத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடி அபராதம் வசூல்

Published On 2021-06-06 15:13 GMT   |   Update On 2021-06-06 15:13 GMT
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 460 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:

கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவு பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து கண்காணிப்புப்பணிகள் மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 17.3.2021 முதல் 4.6.2021 வரை விதிமுறை கடைபிடிக்காமல் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டமைக்காக சுகாதாரத்துறையின் மூலம் ரூ.1,92,500-ம், காவல்துறையின் மூலம் ரூ.68,93,000-ம், வருவாய்த்துறையின் மூலம் ரூ.19,48,560-ம், ஊராட்சித்துறையின் மூலம் ரூ.2,40,600-ம், பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.3,06,100-ம், நகராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.7,38,700-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 3லட்சத்து 19ஆயிரத்து 460 அபராத தொகையாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையின் மூலம் வாகனத்தணிக்கையின் போது விதிமுறைகள் மீறி பயணம் மேற்கொண்டவர்களை கண்டறிந்து 1,754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் கட்டணத்தொகை அதிக அளவு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News