தொழில்நுட்பம்
இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன்

இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்

Published On 2019-12-12 07:35 GMT   |   Update On 2019-12-12 07:35 GMT
இயர்டிரான் நிறுவனத்தின் புதிய ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இயர்டிரான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் அழகிய தோற்றம் மற்றும் மென்மையான இயர் குஷன் கொண்டிருக்கிறது. இது காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்கும்.

ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹெட்போன் கொண்டு ஹேண்ட்ஸ்-ஃப்ரீ காலிங் செய்ய முடியும். இந்த ஹெட்போன்கள் ப்ளூடூத் 4.0 தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இது அதிகபட்சம் 10 மீட்டர் வரையிலான பகுதிகளில் சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. 



புதிய இயர்டிரான்ஸ் ப்ரோ வயர்லெஸ் ஹெட்போனினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் இந்த ஹெட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சார்ஜ் தீர்ந்து போனால், ஆக்ஸ் (AUX) கேபிள் கொண்டும் பயன்படுத்த முடியும். 

245 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதியை கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயர்டிரான்ஸ் ப்ரோ ஹெட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News