தொழில்நுட்பம்
மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப்

ஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு

Published On 2020-04-03 09:08 GMT   |   Update On 2020-04-03 09:08 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது.


 
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயனர்கள் எளிதில் வீடியோ சாட் மேற்கொள்ள முடியும். 

முன்னதாக சூம் போன்ற வீடியோ கால் செயலிகள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை தொடர்ந்து ஃபேஸ்புக் தனது செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து உலகின் பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், வீடியோ சாட் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.



நேரடியாக சந்திக்காமல் இருப்பதால், மக்கள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெஸ்க்டாப் பிரவுசர் கொண்டு ஆடியோ, வீடியோ காலிங் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்து இருக்கிறது. மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி இலவச க்ரூப் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என மெசஞ்சர் பிரிவு துணை தலைவர் ஸ்டான் சன்னோவ்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன் பற்றிய திட்டத்தை ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. மெசஞ்சர் செயலியை தனி நிறுவனமாக மாற்றும் பணிகளின் போது இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றிய இதர தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டன.

விண்டோஸ் இயங்குதளத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷனை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்தும், மேக் வெர்ஷனை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்லலாம்.
Tags:    

Similar News