செய்திகள்
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்

அமித்ஷாவின் ஆலோசகராக போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்

Published On 2019-12-06 08:24 GMT   |   Update On 2019-12-06 08:24 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு ஆண்டு அவர் இந்த பணியில் இருப்பார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக பொறுப்பு வகித்தவர் விஜயகுமார். அப்போது சென்னையில் ரவுடிகளை ஒழிப்பதிலும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதிலும் சிறப்பாக செயல்பட்டார்.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சவாலாக இருந்து வந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு படைக்கும் விஜயகுமார் தலைமை தாங்கி வழிநடத்தினார். அப்போது தான் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News